Did you Saw a UFO..??

You saw Something in the Sky which you cant explain..??
Please report it to MUFON (Mutual UFO Network)

MUFON Link

ParakkumThattu ®

ParakkumThattu ®

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மெக்ஸிகோ நாட்டின் எரிமலையில் பறக்கும் தட்டு..

9 டிச. 2013
மெக்ஸிகோ.


பறக்கும் தட்டுகள் பற்றி தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிகழ்வுகளை பார்த்து,கண்காணித்து வருபவர்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியம் அளிக்காது.. ஏனென்றால் உலகின் எந்த பகுதியில் உள்ள எரிமலை குமுற தொடங்கினாலும் அந்த எரிமலையின் அருகில் அடிக்கடி பறக்கும் தட்டுகள் தென்படுவது பல ஆண்டுகளாக நடந்து வரும் விஷயம்..

இப்படி எரிமலைகளில் பறக்கும் தட்டுகள் தென்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன..

1. எரிமலைகள் குமுறும் போது மிக,மிக அதிக அளவில் சக்தி வெளிப்படுகிறது
அந்த சக்தியை பெறுவதற்காக..

2. எரிமலைகள் குமுறும் போது பூமியின் வெகு ஆழத்தில் உள்ள மிக அரிதான
உலோகங்கள் பொங்கி மேலே வ்ருகிறது.. அந்த உலோகங்களின் பயன்பாடு நமக்கு தெரியாது,ஆனால் வேற்றுகிரகவாசிகளுக்கு அவை மிக அவசியம்..

3. வேற்றுகிரகவாசிகள் வேறு கிரகத்தில் இருந்து பூமிக்கு வர பல மில்லியன் ஒளிவருடங்கள் ஆகும்.. ஆனால் பூமியின் அடிஆழத்தில் வேறொரு பரிமாணத்தின் நுழைவு வாசல் (Dimensional Portal) உள்ளது. இது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்ல ஒரு குறுக்குவழி..

என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.. காரணம் எதுவாக இருந்தாலும் இது நடப்பதென்னவோ உண்மை..

முன்பு இந்த விஷயம் அவ்வளவாக வெளியே தெரியாது.. ஆனால் தற்போதுள்ள தொழில் நுட்பத்தின் காரணமாக எரிமலை பொங்க போகும் தகவல் வெளியான உடனேயே அனைத்து தொலைக்காட்சி,பத்திரிக்கைகள் அங்கு நிகழ்பவற்றை ஒளிபரப்புகின்றன. அந்த காமிராக்களில் ஏதேச்சையாக பறக்கும் தட்டுகள் படம் பிடிக்க படும் போது அந்த வீடியோவின் நம்பகதன்மை அதிகரிக்கிறது..

இதே போல் தான் சமீபத்தில் பொங்கிய மெக்ஸிகோ நாட்டின் எரிமலையில் பறக்கும் தட்டு ஒன்று வேகமாக எரிமலையின் உள்ளே செல்கிறது. அந்த வீடியோ மற்றும் பல எரிமலைகளில் தென்பட்ட பறக்கும் தட்டுகள் பற்றிய வீடியோக்கள் உங்களுக்காக இங்கே..