Did you Saw a UFO..??

You saw Something in the Sky which you cant explain..??
Please report it to MUFON (Mutual UFO Network)

MUFON Link

ParakkumThattu ®

ParakkumThattu ®

வியாழன், 5 ஜூலை, 2012

கொலராடோ காட்டுத்தீயில் பறக்கும் தட்டு...

டந்த ஜூன் 23ம் தேதி அமெரிக்காவில் இருக்கும் கொலராடோ மாகாணத்தில் உள்ள வால்டோ பள்ளதாக்கில் உள்ள காட்டில் காட்டுதீ பரவியது. இது இன்று வரை கட்டுபடுத்த முடியாமல் எரிந்து வருகிறது. இது குறித்து சேனல் 13 என்ற டிவி சேனல் ஒளிபரப்பிய காட்சியில் பறக்கும் தட்டுகள் (UFO) தென்பட்டுள்ளது அமெரிக்கா மற்றும் உலகளாவிய   பறக்கும் தட்டு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் டிவியில் பதிவு செய்த காட்சி கீழே..



இதில் ஒரு தீயணைப்பு ஹெலிகாப்டர் தீயை அணைக்கும் முயற்சியில் இருக்கும் போது அதன் பின்னே ஒரு பறக்கும் பொருள் செல்கிறது. இது பறக்கும் தட்டாக இருக்க கூடும் என்று கருத படுகிறது. இந்த தீவிபத்துக்கு முன்னால் இடி முழக்கம் மற்றும் மின்னல் போன்ற சத்தத்தையும், வெளிச்சத்தையும் வானத்தில் கண்டதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். 

எனவே இந்த தீவிபத்திற்கே ஒரு பறக்கும்தட்டு மோதி விபத்துள்ளானதே காரணமாகவும் இருக்க கூடும் என்று  பறக்கும் தட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த கருத்துக்கு வலு சேர்ப்பது போல் தீ பெரிதாகும் நேரத்தில் எடுக்க பட்ட மற்றொரு வீடியோவில் அந்த இடத்திலிருந்து அதே  நேரத்தில் ஒரு பறக்கும் தட்டு அந்த இடத்திலிருந்து பறந்து செல்வது சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது. 

அந்த காட்சியும் கீழே... 


Youtube Links:-
Video 1: http://youtu.be/paSmVbS77Qo
Video 2: http://youtu.be/lbfq-gO4pUk

மேலதிக விவரங்களுக்கு இணையத்தில் தேடுங்கள்..
Colorado waldo canyon UFO sighting