Did you Saw a UFO..??

You saw Something in the Sky which you cant explain..??
Please report it to MUFON (Mutual UFO Network)

MUFON Link

ParakkumThattu ®

ParakkumThattu ®

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

2012 -ம் மாயா இன மக்களும்.. 11



இந்த கட்டுரை திரு.ராஜ்சிவா அவர்களால் உயிர்மை.காம் தளத்தில் எழுதப்பட்டது. மிக அருமையான ஆய்வுக்கட்டுரை ஆகையால் இதனை இத்தளத்தில் பதிவிடுகிறேன். அனைத்து உரிமைகளும் ஆசிரியருக்கே.
வேற்றுக்கிரகவாசி




மாயன்களிடம் மொத்தமாக மூன்று நாட்காட்டிகள் இருந்தன என்று கடந்த பதிவில் பார்த்தோம்.  மாயன்களிடம் இருந்த மூன்று நாட்காட்டிகளில், ஒன்று 365 நாட்களைக் கொண்டது. இரண்டாவது 260 நாட்களைக் கொண்டது.  ஆனால் இவை இரண்டுமே குறுகிய காலக் கணக்கைக் கொண்ட நாட்காட்டிகள்.

மாயன்கள் மிகப் பெரிய சுற்றைக் கொண்ட ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவைக் கொண்டு உருவாக்கபட்டது அது. அதை  'நீண்ட கால அளவு நாட்காட்டி' (Long Count Periods) என்றைழைக்கின்றனர் தற்கால ஆராய்ச்சியாளர்கள். இது ஷோல்டுன் (Choltun) என்று மாயன்களால் பெயரிடப்பட்டது.




படத்தில் காணப்படுவதுதான் மாயன்களின் 260 நாட்களைக் கொண்ட 'ஷோல்க் இஜ்' (Cholq ij) என்னும் பெயருடைய நாட்காட்டி.  ஒன்றுடன் ஒன்று இணைந்த இரண்டு சக்கரங்கள் முறையே 13 பிரிவுகளையும், 20 பிரிவுகளையும் கொண்டது. இந்த இரண்டு சக்கரங்களும் முழுமையாகச் சுற்றும் போது,  13X20=260 நாட்கள் முடிவடைந்திருக்கும்.

இதே போல, 365 நாட்களைக் கொண்ட,  பெரிய சக்கரமுள்ள இன்னுமொரு 'ஷோல் அப்' (Chol’ab’) என்னும் இரண்டாவது நாட்காட்டியும் மாயனிடம் உண்டு.  ஆனால் மாயன்கள் அத்துடன் விட்டுவிடவில்லை. இந்த மூன்று சக்கரங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து முழுமையாகச் சுற்றிவரக் கூடிய இன்னுமொரு நாட்காட்டியையும் உருவாக்கினார்கள். மாயனின் அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு தெரியப்படுத்தியது 'ஷோல்டுன்' (Choltun) என்னும்  இந்த நாட்காட்டிதான்.



இந்தப் படத்தில் உள்ளது போன்ற சில வட்ட வடிவமான சுற்றும் அச்சுகள் மாயன்களால் தயார் செய்யப்பட்டது. சிறிய அச்சைச் சுழற்றுவதன் மூலம் மற்றைய அச்சுகளும் சுழல்வது போல அது அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் சுழற்சியின் மூலம் அந்த அச்சுகள் ஐந்து நிலைகளைச் மாறி மாறிச் சுட்டிக் காட்டும். அப்படிச் சுட்டிக் காட்டும் ஐந்து நிலைகளும ஐந்து எண்களை குறிக்கும்.  அந்த நாட்காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கும். மிகப் பெரிய அச்சு தனது ஒரு சுற்றைப் பூர்த்தியாக்கி ஆரம்ப நிலைக்கு வரும் போது, மீண்டும்  13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் எடுக்கிறது.

அதாவது  ஆரம்ப நாளான 0, 0, 0, 0, 0 இல் ஆரம்பித்து, இறுதி நாளான 13, 0, 0, 0, 0 நாளை அடைய 5125 வருடங்கள் ஆகின்றது. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் திகதியான 0, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நவீன நாட்காட்டியின்படி,  கி.மு. 3114 ஆவணி மாதம் 11ம் திகதியிலிருந்து  ஆரம்பமாகிறது.  அது போல, முடிவடையும் திகதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதய நவீன நாட்காட்டியின்படி, கி.பி. 2012 மார்கழி மாதம் 21ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.

 மாயன் பற்றிய பல விசயங்களை, மிகவும் விளக்கமாக சொல்லாமல், நான் மேலோட்டமாகத்தான் சொல்லி வருகிறேன். காரணம் அதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு அயர்ச்சியை அது தோற்றுவிக்கலாம். அதனால், மாயன்களின் பெயர்கள், அவர்கள் பயன்படுத்திய பெயர்கள் ஆகியவற்றை தவிர்த்தே இந்தத் தொடரை எழுதி வருகிறேன். ஆனால் எல்லாவற்றையும் அப்படி விட்டுவிட்டுப் போய்விட முடியாது. சில தெளிவான விளக்கம்தான் இனி வர வேண்டியவற்றிற்கு முழுமையான அறிவைக் கொண்டு வரும் என்பதால், சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும். இப்போ, கொஞ்சம் கவனத்தை அங்கே இங்கே பாய விடாமல் கூர்மைப்படுத்தி இதை வாசியுங்கள்.



மாயன் நாட்காட்டியின் 0, 0, 0, 0, 0 ஆரம்பநாள் 0, 0, 0, 0, 0   4 Ahau என்றுதான் இருக்கும். இதில் வரும் 'ஆகவ்' (Ahau) என்பதன் அர்த்தம் கடவுள் என்பதாகும். அத்துடன், 4 Ahau என்பதில் கடவுள் பூமியை உருவாக்கினார் என்பதே மாயன் முடிவு. இதன்படி, மாயன் நாட்காட்டியின் அச்சுக்கள் சுற்றும் போது, வரிசையாக கீழே தந்தபடி 1,0,0,0,0 பின்னர் 2,0,0,0,0 பின்னர் 3,0,0,0,0 …….. இப்படி நாட்காட்டி மாறிக் கொண்டே வரும். பதின்மூன்றாவது சுற்றின் பின்னர் 13,0,0,0,0 என்பதில் நாட்காட்டி வரும் போது சரியாக 4 Ahau மீண்டும் வருகிறது. இந்த நாள்தான் 22.12.2012.

என்ன புரிகிறதா……….? சரி, புரியாவிட்டால் அப்படியே கீழே இந்த அட்டவணையைப் பாருங்கள்………!

0.0.0.0.0. 4 Ahau 8 Cumku

1.0.0.0.0. 3 Ahau 13 Ch´en

2.0.0.0.0. 2 Ahau 3 Uayeb

3.0.0.0.0. 1 Ahau 8 Yax

4.0.0.0.0. 13 Ahau 13 Pop

5.0.0.0.0. 12 Ahau 3 Zac

6.0.0.0.0. 11 Ahau 8 Uo

7.0.0.0.0. 10 Ahau 18 Sac

8.0.0.0.0. 9 Ahau 3 Zip

9.0.0.0.0. 8 Ahau 13 Ceh

10.0.0.0.0. 7 Ahau 18 Zip

11.0.0.0.0. 6 Ahau 8 Mac

12.0.0.0.0. 5 Ahau 13 Zotz´

13.0.0.0.0. 4 Ahau 3 Kankin

இதுவும் புரியவில்லையா……….? பரவாயில்லை இதை அப்படியே சிறிது விட்டுவிட்டு, ஒரு தேனீர் அருந்திவிட்டு, இந்த அட்டவணையைக் கவனியுங்கள். மாயனின் மொழியின் படி நாட்கள், மாதங்கள்,  வருடங்களுக்கான பெயர்களுடன் சில விளக்கங்கள் தருகிறேன் புரிகிறதா பாருங்கள்.

  1 நாள் = 1 கின் (Kin)                              (1x1)                     1 day

20 கின் = 1 வினால் (Winal)                     (20x1)                 20 days

18 வினால் = 1 டுன் (Tun)                         (18x1)               360 days

20 டுன் = 1 காடுன் (Katun)                      (20x1)             7200 days

20 காடுன் = 1 பக்டுன் (baktun)                (20x1)        144,000 days

13 பக்டுன்= 1 முழுச் சுற்று ( great Cycle) (13x1)      1,872,000 days

 இங்கு 'கின்' என்பது நாளையும், 'வினால்' என்பது மாதத்தையும், 'டுன்' என்பது வருடத்தையும் குறிக்கும் சொற்கள். 'காடுன்', 'பாக்டுன்' என்பன அதற்கும் மேலே!

 1,872,000 நாட்கள் என்பது 5125 வருடங்கள்.

இப்படி 5125 வருடங்கள் எடுப்பதை, மாயன்கள் ஒரு முழுச் சுற்று என்கின்றனர். இது போல மொத்தமாக ஐந்து முழுச் சுற்றுகள் சுற்றி முடிய, பூமி தனது இறுதிக் காலத்தை அடையும் என்பது மாயன்களின் கணிப்பு. அதாவது கிட்டத்தட்ட 26000 வருடங்களில் (5x5125=25625) உலகம் இறுதிக் காலத்தை அடையும் (Doomsday).

 இதுவரை நான்கு முழுச் சுற்றுகள் முடிவடைந்து விட்டதாகவும், இப்போது ஐந்தாவது கடைசிச் சுற்று நடந்து கொண்டிருக்கிறதாகவும் மாயன்கள் சொல்லி இருக்கிறார்கள் (இது ஓரளவுக்கு இந்துக்களின் யுகங்களுக்கு பொருந்துவதாக இருக்கிறது). இதை இன்னும் ஆழமாகச் சொல்வதானால், ஐந்தாவது சுற்றின் முதல் நாள், கி.மு. 3114ம் ஆண்டு ஆவணி மாதம் 11ம் திகதி (11.08.3114 கி.மு) அன்று ஆரம்பித்து, 5125 வருடங்கள் கழித்து 21ம் திகதி மார்கழி மாதம் 2012ம் ஆண்டு (21.12.2012) அன்று, கிட்டத்தட்ட 26000 வருசங்களைப் சுற்றிப் பூர்த்தி செய்கிறது பூமி. அதாவது, இந்த நாளே உலகம் அழியும் எனப் பலர் நம்பும் இறுதி நாளாகும்.

இதுவரை மாயன் சொல்லியவற்றைப் பார்த்தோம். இதை எல்லாம் ஒரு அறிவியல் விளக்கம் இல்லாமல் எம்மால் எப்படி நம்ப முடியும்? எங்கோ, எப்போதோ பிறந்த, யாரோ சொன்னதை நம்பி உலகம் அழியும் எனப் பயம் கொள்ள, பகுத்தறிவு அற்றவர்களா நாம்? எனவே நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

 இப்போ, நவீன வானவியல் என்ன சொல்கிறது என்று பாருங்கள்….!

சில காலங்களின் முன் 'ஹபிள்' (Hubble) என்னும் தொலை நோக்கிக் கருவியை 'நாசா' (NASA) வின்வெளிக்கு அனுப்பியது. அது வான்வெளியில் ஒரு 'செயற்கைக் கோள்' (Satellite) போல, பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வின்வெளியை அவதானித்ததில் எங்கள் நவீன வானவியல் அறிவு பன்மடங்கு அதிகரித்தது.



இந்த 'ஹபிள்' மூலம் பலப் பல வானியல் உண்மைகளை நாம் கண்டறிந்தோம். அப்படிக் கண்டு பிடித்த விசயங்களில் சிலவற்றை,  மாயனுடன் சரி பார்த்ததில்தான், ஆராய்ச்சியாளர்களை வியப்பு ஆக்கிரமித்துக் கொண்டது. எங்கே இவர்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிடுமோ என்ற பயமும் கூடவே தொற்றிக் கொண்டது.

 நாங்கள் இருக்கும் பால்வெளி மண்டலம் ஒரு விசிறி (Fan) போன்ற அமைப்பில் இருக்கிறது.  அத்துடன் அது தட்டையான வடிவிலும் காணப்படுகிறது. அந்த விசிறி அமைப்புக்கு பல சிறகுகள் (Wings) உண்டு. அந்த சிறகுகளில் ஒன்றின் நடுவே எமது சூரியக் குடும்பம் இருக்கிறது.



பால்வெளி மண்டலம் கோடிக் கணக்கான நட்சத்திரங்களைத் தன்னுள் உள்ளடக்கி வெண்மையாக, ஒரு பாய் போல, தட்டையாகக்  கிடையாகப் பரவியிருக்கிறது.



எங்கள் சூரியன், தனது கோள்களுடன், இந்தப் பால்வெளி மண்டலத்தில் ஒரு வட்டப் பாதையில் அசைந்து கொண்டு இருக்கிறது. அந்த அசைவு பால்வெளி மண்டலத்திற்கு செங்குத்தான திசையில் அமைந்திருக்கிறது. தயவு செய்து நான் இப்போ சொல்லி வருவதை மிக நிதானமாகக் கவனியுங்கள். இது கொஞ்சம் வானியல் கலந்ததாக இருப்பதால், விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கும். இது விளங்காத பட்சத்தில், யாரிடமாவது கேட்டுப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். .

ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச் சுற்றுகிறது. எங்கள் பால் வெளி மண்டலமும் அப்படித்தான் சுற்றுகிறது. ஆனால் எங்கள் சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே, மேசையில் இருக்கும் மின்விசிறி (Table fan) போல, பால்வெளி மண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறது. என்னால் முடிந்த அளவுக்கு இதை படமாக வரைந்திருக்கிறேன். புரிகிறதா எனப் பாருங்கள்.



எங்கள் பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள்.



எங்கள் சூரியன் தனது வட்டப் பாதையில் செங்குத்தாக சுற்றும் போது, பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் ஒரு குறித்த காலத்தின் பின்னர் சந்திக்கிறது. இனி நான் சொல்லப் போவதுதான் மிக முக்கியமான ஒன்று.  எங்கள் சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம் என்ன தெரியுமா……..? 26,000 வருடங்கள்.

 அதாவது சூரியன், பால் வெளி மண்டலத்தில் தனது நகர்வின் போது, இருந்த இடத்திற்கு, ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் வருவதற்கு 26,000 வருடங்கள் எடுக்கிறது. 26,000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படிச் சுற்றி, மத்திய ரேகையைச் சந்திக்கிறது. இம்முறை அந்த அச்சை நமது சூரியன் எப்போது சந்திக்கப் போகிறது தெரியுமா...? 2012ம் ஆண்டு மார்கழி மாதம் 21ம் திகதி.



அதாவது மாயன்களின் நாட்களிகளின் மொத்தச் சுற்றுகளுக்கு எடுக்கும் 26000 வருடங்களும், பால்வெளி மண்டலத்தின் அச்சை அடையும் காலமான 21.12.2012 என்பதும் அச்சு அசலாக எப்படிப் பொருந்துகிறது?

இத்துடன் ஆச்சரியம் தீர்ந்து விடவில்லை. இன்னும் ஒரு ஆச்சரியமும் இதில் உண்டு.

 சூரியன், பால்வெளி மண்டலத்தைச் சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே கருமையான ஒரு பள்ளம் (Dark Rift) போன்ற இடம் இருக்கிறதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் ஈர்ப்பு விசையினால் சூரியக் குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு அல்லது ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படும் ஆபத்து உண்டு என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.





ஏதாவது ஒரு காலத்தில் இப்படிச் சூரியன் மத்திய ரேகையைத் தொடும் போது, கருப்புப் பள்ளத்தின்  ஈர்ப்பு விசை அதை இழுக்கலாம்.  ஒரு முறை நடக்காவிட்டாலும்,  ஏதாவது 26,000 வருசங்களுக்கு ஒரு முறை அப்படி நடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு கொண்டனர். இப்படி ஒரு அறிவியல் சாத்தியங்களை சொல்லிவிடக் கூடிய ஒரு இனம் இருக்குமென்றால், நிச்சயம் அந்த இனத்தை மதித்தே தீர வேண்டும்.



சரி......! இது மட்டும்தான் மாயனின் 26000 வருசக் கணிப்புப் பற்றிய ஆச்சரியம் என்று நீங்கள் நினைத்தால், மாயன்கள் பற்றி தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். இது மட்டும் இல்லை……! இன்னுமொன்றும் உண்டு. அது, இதைவிட ஆச்சரியமானது. மாயனையே தலையில் வைத்துக் கொள்ளலாம் போல நினைக்க வைக்கும் ஒன்று.

 அது பற்றி அறிய அடுத்த தொடர் வரை கொஞ்சம் காத்திருங்கள்........!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக