Did you Saw a UFO..??

You saw Something in the Sky which you cant explain..??
Please report it to MUFON (Mutual UFO Network)

MUFON Link

ParakkumThattu ®

ParakkumThattu ®

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

தென்னாப்பிரிக்காவில் ராட்ஷச காலடித்தடம்..

தென்னாப்பிரிக்காவில் உள்ள Mpaluzi பகுதியில் ராட்ஷச மனிதனின் காலடித்தடம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இந்த காலடித்தடம் கிரானைட் கல்லில் பதிந்துள்ளதிலிருந்து இது ஏறத்தாழ 200 மில்லியன் வருடத்திலிருந்து 3 பில்லியன் வருடத்திற்கு முந்தையதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த காலடியின் நீளம் நான்கு அடி.. !!! இந்த காலடி தடத்திற்கு சொந்தமான மனிதன்(??!!) கண்டிப்பாக 20 லிருந்து 22 அடி உயரமானவனாக இருந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்..



தமிழாக்கம் : செந்தில் .த

வியாழன், 29 டிசம்பர், 2011

அமெரிக்காவில் ஸ்ரீ யந்திரம் ??

அமெரிக்காவில் ஒரிகான் மாகாணத்தில்  உள்ள ஒரு காய்ந்த ஏரி படுகையில் பறந்த விமானி ஒருவரால் 1990-ல் கண்டுபிடிக்க பட்டது இந்த அமைப்பு...


இந்த அமைப்பின் மொத்த நீளம் 21.404 (13.3 Miles) கிலோ மீட்டர்கள்.இதன் கோடுகள் 10 inch அகலமும், 3 inch ஆழமும் கொண்டவை. இதை வானத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்.இந்த பகுதியில் அடிக்கடி சிறிய ரக விமானங்கள் பறப்பது வழக்கம்..ஆனால் அது வரை யாரும் இது குறித்து தெரிவிக்காததிலிருந்து இது மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது நூறு  சதவீதம் இந்துகளால் மிக சக்தி வாய்ந்ததாக கருதி பூஜிக்க படும் ஸ்ரீ யந்திரத்தை ஒத்து இருக்கிறது..




Oregon, USA


Sri Chakra



இந்த கண்டுபிடிப்பு பத்திரிகைகளில் வெளிவந்த போது இதை தாங்கள் தான் உருவாக்கியதாக நான்கு பேர் தெரிவித்தனர். அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்று அந்த அமைப்பை போல செய்ய சொன்னதற்கு அவர்களால் 1/4 inch கூட தோண்ட முடியவில்லை..

காரணம் அந்த அளவிற்கு கடினமானது அந்த தரையின் உள் பகுதி.. மேலும் அந்த இடத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்த பின் அவர்களின் வாகன தடங்கள் தரையில் தெரிந்தன.. ஆனால் அதற்கு முன் எந்த வாகன தடங்களும் இல்லை. எனவே இது மனிதர்களால் உருவாக்க பட்டதல்ல என்றால் வேறு யார்..???

ஆதாரம் : http://www.labyrinthina.com/sriyantra.htm | http://en.wikipedia.org/wiki/Sri_Yantra






சனி, 10 டிசம்பர், 2011

வேற்றுகிரகவாசிகளின் தளம் கண்டுபிடிப்பு..!

Xianyang பிரமிட்

சீனாவில் க்ஸியான்ங் ( Xianyang ) எனும் பகுதியிலுள்ள பிரமிடில் வேற்றுகிரகவாசிகளின் தளத்தை சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரமிடை வேற்றுகிரகவாசிகள் சுமார்17000 ஆண்டுகளுக்கு முன்னர் (15000 BC) செயல்தளமாக (Base) பயன்படுத்தியுள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

15000 BC அல்லது அதற்கு முன் எந்தவிதமான மனித நாகரீகமும் உலக வரலாற்று ஆதாரங்களில் இல்லை எனவும் இந்த பிரமிடில் பயன்படுத்த பட்டுள்ள தொழில்நுட்பம் நிச்சயமாக மனிதர்களுடையது இல்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.


இந்த பிரமிடில் இருந்து மிக நீளமான குழாய்கள் பூமியின் வெகு ஆழத்திற்கு செல்கின்றன.இந்த குழாய்கள் பல வண்ணங்களில் இருந்தாலும் அவை அந்தந்த பகுதியிலுள்ள மண் மற்றும் பாறைகளின் வண்ணத்தையே கொண்டுள்ளன.

பூமியின் ஆழத்திற்கு செல்லும் குழாய்கள்

மேலும் இந்த குழாய்களில் 8 சதவீதத்துக்கும் மேல் உள்ள உலோகம் இதுவரை கண்டுபிடித்துள்ள எந்த உலோக வகையையும் சேராதது என்பது குறிப்பிட தகுந்தது.


பிரமிடின் தட்டையான மேல் பகுதி








அடையாளம் தெரியாத பொருட்கள்








 நன்றி: Beforeitsnews.com