சாக்ரமெண்டோ பகுதியை சேர்ந்தவர் Elijah Prychodzko இவர் கடந்த டிச.20ம் தேதி தனது டெலஸ்கோப்பில் வானத்தை பார்த்து கொண்டிருந்த போது இவர் ஒரு பெரிய வெளிச்சமான கிரகம் போன்ற ஒன்றையும் அதனை சுற்றும் ஒரு சிறிய பொருளையும் கண்டார். அவரிடம் உள்ள மொபைல் போனின் உதவியோடு பதிவு செய்த காட்சிகள் பார்வையாளர்களையும், வானியல் ஆய்வாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஏனென்றால் யாருக்கும் இந்த நிகழ்சி என்னவென்று தெரியவில்லை. இந்த வீடியோவை காட்டி வானியல் ஆய்வாளரான Dr. Stephen P Maran அவர்களிடம் கருத்து கேட்ட போது இது போன்ற காட்சியை தான் இதுவரை கண்டதில்லை என்றும், இது ஒரு கிரகங்கள் (அ) வானியல் சார்ந்ததாக இருக்க முடியாது என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் இதனை பற்றிய தகவலறிந்த அமெரிக்க தொலைக்காட்சியான CBS13 இது பற்றிய வீடியோவினை வெளியிட்டுள்ளது..
அது உங்களின் பார்வைக்கு..
”இதெல்லாம் ஏமாற்று வேலை; கிராஃபிக்ஸ்” அப்படின்னு சொல்வாங்க சார் இந்த அறிவுஜீவிங்க. இன்னும் சிலர் “இதெல்லாம் செட்டப்” அப்படிப்பாங்க. சிலரோ “அது பறக்கும் தட்டெல்லாம் இல்லை. ஏதோ உளவு விமானம்” அப்படிப்பாங்க. எது, எப்படியோ, ”பறக்கும் தட்டு” எனப்படும் UFO OBJECT இருப்பது 100% உண்மை.
பதிலளிநீக்கு